அமெரிக்காவில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி மாணவர் சித்தார்த் நந்தியாலா, மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அவரது Circadian என்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலி, வெறும் 7 நொடிகளில் இதய நோய்களைக் கண்டறியும் திறன் கொண்டுள்ளது.
இளம் வயதிலிருந்தே தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட சித்தார்த், Oracle மற்றும் ARM நிறுவனங்களின் AI சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம், உலகின் மிக இளம் AI சான்றிதழ் பெற்ற நிபுணர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். Smart Phone மூலம் இதய ஒலிகளைப் பதிவு செய்து, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 7 நொடிகளில் இதய நோய்களைக் கண்டறியும் திறன் கொண்டுள்ளது.
96% க்கும் அதிகமான துல்லியமான கண்டறிதல் விகிதம் உள்ளது. அமெரிக்காவில் 15,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும், இந்தியாவில் 700 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கும் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
Circadian செயலி மருத்துவச் செலவுகளைக் குறைத்து, பொது சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. ஆரம்ப நிலையிலேயே இதய நோய்களைக் கண்டறிந்து, உடனடி சிகிச்சையளிக்க இந்தச் செயலி உதவுகிறது