ஹட்டன், பொகவந்தலாவை பிரதான வீதியில் மீன்பிடி பூனை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இந்த சடலத்தை இன்று காலை 9 மணியளவில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தை பொகவந்தலாவை பொலிஸார், நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளதோடு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
