வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையில் நிலவும் தாதியர் பற்றாக்குறை, 24 மணி நேர சேவை இன்மை, நோயாளர் விடுதியை நிறுத்தியமை, நோயாளர் காவு வண்டியை காரைநகர் வைத்தியசாலைக்கு வழங்கியமை போன்ற விடயங்களை மையப்படுத்தி போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வைத்தியசாலையின் பயனாளிகள், பொதுமக்கள், சமூக மட்ட அமைப்பினர் என கலந்த்துக் கொண்டதுடன் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
