Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் ஊடகி சஞ்சிகை வெளியீடு

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையத்தினால் நடாத்தப்பட்ட ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களால் நேற்றையதினம் (22) ஊடகி சஞ்சிகையானது வெளியிடும் நிகழ்வு வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது .

ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ர பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

விருந்தினர்கள் இணைந்து ஊடகி சஞ்சிகையினை வெளியிட்டு வைத்ததுடன், குறித்த சஞ்சிகையானது ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் உயர் சான்றிதழ் கற்கை நெறி மாணவர்களால் ஊடகி – இதழ் 1 என வெளியிடப்பட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சஞ்சிகையில் கவிதைகள், வன்னி தொடர்பான தகவல்கள், பட்டலந்த வதைமுகாம், ஊடகம் மற்றும் பெண்களின் ஒப்பீடு, வரலாற்று ஆய்வுகள், வடக்கு கடல்வளம் அழிவடைதல் தொடர்பான இலங்கை இந்திய அரச பார்வைகள், போதைப்பொருளால் ஏற்படும் சமூக சீர்கேடுகள், சர்வதேச அரசியலின் இராஜதந்திர வெளியுறவு கொள்கை மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவூட்டும் தகவல்கள் என பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைந்த இலத்திரனியல் ஊடக அலகின் பணிப்பாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமாகிய திருமதி மதிவதனி சசிதரன், வருகைதரு விரிவுரையாளரும் பிசப் சவுந்தரம் ஊடக இயக்கத்தின் இயக்குநருமாகிய கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகள், ஊடக விரிவுரையாளரும் மூத்த பத்திரிகையாளருமாகிய அ.நிக்ஸன், வவுனியாப் பல்கலைக்கழக நூலகர் S.சண்முகதாசன், வருகைதரு விரிவுரையாளர் ந.விமலச்சந்திரன், ஊடகவியலாளர்கள், ஊடகம் மற்றும் இதழியல் கற்கைதுறை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி வலி. தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு
அடுத்த செய்தி தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் – இரு உறுப்பினர்களுக்கிடையில் கடும் விவாதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி பாவனையை கைவிட்டதால் முதல் நிலை பெற முடிந்தது – மாணவி சதுர்சிகா

ஏப்ரல் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி!(Video இணைப்பு )

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்…

அக்டோபர் 8, 2024
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் 34 ஆயுததாரிகள் கைது

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?