இலங்கையின் வடமாகாணத்தில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்தே இந்த 56 பாடசாலைகளும் மூடப்படுவதற்காக, கல்வியமைச்சினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதும் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து, அவற்றின் அருகே 3 கிலோ மீற்றருக்குள் வேறு
பாடசாலையிருப்பின், அப்பாடசாலைகளை மூடுவதற்குத் தற்போதைய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. வடமாகாணத்தில் தற்போதுள்ள 13 கல்வி வலயங்களிலும் 981 பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றில் 454 பாடசாலைகளில் ஒவ்வொன்றிலும் 100க்கும் குறைந்த மாணவர்களே
கல்வி கற்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை வடமாகாணத்தில் மூடப்படுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 56 பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.