1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்திற்காக, 80 வயதுடைய ஒரு பெண்ணுக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி அம்பலாந்தோட்டையில் வசித்த ஜெயசேன என்பவரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, சிறிமா எதிரிசூரிய என்பவர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம், சிறிமா எதிரிசூரியவுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
எனினும்,கொலைக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பில் இரண்டு நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக குறித்த கொலையை நிரூபிக்கமுடியாதுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்களைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.


