அச்சுவேலி நிலாவரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவர் வல்வெட்டித்துறையை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
