Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

வர்ணனையாளர் டான் செர்ரிக்கு உயரிய விருது வழங்க கியூபெக் கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹொக்கி விளையாட்டின் பிரபல வர்ணனையாளர் டான் செர்ரிக்கு (Don Cherry) ஒர்டர் ஆஃப் கனடா (Order of Canada) விருது வழங்க வேண்டும் என்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் முயற்சிக்கு, அந்தக் கட்சியின் கியூபெக் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் இம்முடிவு ஒரு தவறான யோசனை என, அக்கட்சியின் கியூபெக் மாகாணப் பொறுப்பாளர் பியர் பால்-ஹஸ் (Pierre Paul-Hus) பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளாக ஹொக்கி வர்ணனையாளராக இருந்த 92 வயது டான் செர்ரி, தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அறியப்படுபவர் ஆவார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோரை You people” என்ற வார்த்தையூடாகக் குறிப்பிட்டு, அவர்கள் Poppy பூக்களை அணிவதன் மூலம் போர் வீரர்களை மதிப்பதில்லை என்று கூறியதற்காக அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு முன்பும், பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் குறித்தும் அவர் பலமுறை இழிவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), டான் செர்ரி ஒரு உண்மையான கனேடியர் எனக் கூறி இந்த விருதுக்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால், கியூபெக்கைச் சேர்ந்த அதே கட்சியின் உறுப்பினர்களான பியர் பால்-ஹஸ், ஜெரார்ட் டெல்டெல் உள்ளிட்டோர் இதனை எதிர்க்கின்றனர். பிரெஞ்சு மொழி பேசுபவர்களையும், கியூபெக் தேசத்தையும் அவமதித்த ஒருவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்குவது முறையல்ல என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரதமர் அலுவலகம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 1.8 சதவீதமாகக் குறைந்துள்ள கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம்
அடுத்த செய்தி அதி ஆபத்தான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பியர் நை செயிண்ட்-அமாண்ட்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் ஸ்னோமொபைல் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 17, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் ஊடாக கனடா எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள்! விசாரணைகள் முன்னெடுப்பு

டிசம்பர் 30, 2025
கியூபெக்

மொன்றியலில் பிரெஞ்சு மொழி வீழ்ச்சியடைந்து வருகிறது – பிரான்சுவா லெகோ

ஏப்ரல் 7, 2026
கியூபெக்

புதிய மாற்றத்தை விரும்பிய மொன்றியல் மக்கள்!

நவம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?