புகையிலை நிறுவனங்களுடன் நீண்ட காலமாக நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள மாகாணங்களும் பிராந்தியங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க இழப்பீட்டுத் தொகையைப் பெற உள்ளன.
மொத்தமாக 32.5 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த நிதியில், முதல் தவணையாகப் பல பில்லியன் டொலர்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்கள் தலா ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையைப் பெற உள்ளன.
மற்ற மாகாணங்களுக்கு மில்லியன் கணக்கான டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.
சட்டப்போராட்டத்தில் தோல்வியடைந்த புகையிலை நிறுவனங்களான மற்றும் Imperial Tobacco Canada Ltd. ஆகியவையே, இந்தத் தொகையை வழங்குகின்றன.
மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் கிடைக்கும் இந்த நிதியானது, புகையிலை தொடர்பான சுகாதாரச் செலவுகளை ஈடுகட்டவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
