கியூபெக் மாகாணத்தில் உள்ள வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் திகதி முதல் 3 சதவீதம் உயர்த்துவதற்கு, மாகாண எரிசக்தி சபை (Régie de l’énergie) ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகரித்துவரும் பணவீக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கியூபெக் அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கான கட்டணம் 3 சதவீதத்துடன் கட்டுப்படுத்தப்பட்டாலும், வணிக நிறுவனங்களுக்கு 4.8 சதவீதமும், தொழிற்சாலைகளுக்கு 3.6 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஹைட்ரோ-கியூபெக்கின் ‘2035 செயல்திட்டம்’ (Action Plan 2035) மூலம் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்கத் தேவையான முதலீடுகளை ஈடுகட்டவே, இந்த கட்டண உயர்வு அவசியமாகிறது என மாகாண எரிசக்தி சபை தெரிவித்துள்ளது.
