கியூபெக் மாகாணத்தின் டெரேபோன் நகரில் நடந்த பிரபல கும்பல் தலைவனின் கொலை, 15,000 டொலர் பணம் கொடுத்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு ‘வாடகைக்கொலை’ (Paid Hit) என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதுடைய கோர்டி ஜீன்-பால் (Gordy Jean-Paul) என்ற நபர் கொல்லப்பட்ட வழக்கில், ஒன்ராறியோவைச் சேர்ந்த 21 வயதுடைய இசாயா ஷர்கோல்ட்-ஃபோர்டு (Izaiah Shurgold-Ford) என்பவர் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ‘யங் தேவ்’ (Young Dev) என்ற பெயரில் ராப் பாடகராகவும் அறியப்பட்ட கோர்டி ஜீன்-பால், ஒரு வணிக வளாக வாகன தரிப்பிடத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலைக்காக ஒன்ராறியோவிலிருந்து இரண்டு பேர் கியூபெக்கிற்கு வந்துள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு 15,000 டொலர் பணம் கொடுப்பது தொடர்பில் பேசப்பட்டதாகத் திங்கட்கிழமை நடந்த வழக்கு விசாரணையில் அரச தரப்பு சட்டத்தரணிகள் ஜூரியிடம் தெரிவித்தனர்.
கொலை செய்த பிறகு, குற்றவாளிகள் கொலையைப் புரிவ்பதற்கு தாங்கள் பயன்படுத்திய காரை எரிக்க முயன்றுள்ளனர்.
பின்னர் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து வாடகை வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றபோதே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.