கியூபெக் மாகாணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் காயப்பட்ட குழந்தை, தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ராபர்ட்-லெபல் பூங்காவில் (Robert-Lebel Park) அமைக்கப்பட்டுள்ள பனிச்சறுக்கு மேட்டில் விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உடனடியாக செயின்ட்-ஜீன்-சுர்-ரிச்செலியூ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அந்தக் குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்த குழந்தையின் பாலினம் அல்லது பெயர் விபரங்களை இதுவரை காவல்துறை வெளியிடவில்லை.
இந்த விபத்து குறித்து ரிச்செலியூ செயின்ட் – லாரன்ட் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
