மலேசியாவின் கோத்தா பெலுட் நகருக்கு வடமேற்கே 7.1 மெக்னீடியுட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நில அதிர்வானது பூமியிலிருந்து சுமார் 620 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன், 55 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிர்வினால் எவ்வித சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
