நாட்டில் சாதாரண தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வலப்பனை பிரிவிற்குடப்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளுக்கு இடையில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
அழகியல் பாட பரீட்சை இடைவேளையின் போது இச்சம்பம் நடந்துள்ளதுடன், பரீட்சை நிலையத்திற்கு வலப்பனை காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.
குறித்த மோதலில் காயமடைந்த 5 மாணவர்களும் அழகியல் பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாளுக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகளை காவல்துறை அதிகாரிகள் மேற்க் கொண்டனர்.
இந்த விடயம் தொடர்பில் கும்பல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கைதாகியுள்ள நிலையில், இது தொடர்பிலான விசாரணைகளை வலப்பனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
