மட்டக்களப்பில் ஆசிரியர் நிரந்தர நியமனம் கோரி பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் பட்டதாரிகள்; இன்று திங்கட் கிழமை (08) காந்தி பூங்காவில் முன்னால் கவனயீர்பு;பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
பட்டதாரிகளான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பாடசாலைகளில் இணைக்க ப்பட்டு கடமையாற்றிவரும் உத்தியோகத்தர்களின் பட்டதாரிகள் ஒன்றியம் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது
இதனையடுத்து காந்தி பூங்காவில் முன்னாள் இன்று காலை 9.000 மணிக்கு ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பட்டம் பெற்ற எங்களை ஏன் மட்டம் தட்டுகின்றீர்கள், பேர்டி பரீட்சை மட்டும் தான் தகுதியா? நாங்கள் கற்பித்து பெறுபேறு வரவில்லையா? ஒரே பணி ஒரே அங்கீகாரம் ஆசிரியர் வேண்டும்,
எங்கள் உழைப்பை மதியுங்கள் உரிமையை வழங்கு, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அல்ல ஆசிரியரகவே அங்கீகரிக்கவும், எங்கள் விடையத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுத்தருமா அரசு? ஏங்களுக்கு ஆசிரியர் நிரத்தன நியமனத்தை வழங்கு என பல சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலயம் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டட பின்னர் ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
