கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் Pierre Poilievre தனது எம்பிக்கள் மீது வைத்துள்ள கட்டுப்பாடு, கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் லிபரல் கட்சிக்குத் தாவியுள்ளமை கன்சர்வேடிவ் கட்சியை கடுமையாகப் பாதித்துள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எட்மண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மாட் ஜெனரூ (Matt Jeneroux) ஆளுங்கட்சியான லிபரல் கட்சியில் தற்போது இணைந்திருக்கின்றமை, கனேடிய அரசியலின் அதிகார மையத்தை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் பிரதமர் மார்க் கார்னி ஆற்றிய உரை, கனடாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் ஒரு வலுவான குரலாக ஜெனரூவைக் கவர்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 172 ஆசனங்களைக் கைப்பற்றி விட்டால், மற்ற கட்சிகளின் ஆதரவின்றி பிரதமர் மார்க் கார்னியால் தனது திட்டங்களைச் செயல்படுத்த முடியும் எனும் நிலை காணப்படுகின்றது.
தற்போது நாடாளுமன்றத்தில் 169 ஆசனங்களுடன் இருக்கும் லிபரல் கட்சிக்கு, நாட்டில் இடம்பெறவிருக்கும் இடைத்தேர்தல்கள் மிக முக்கியமானவையாகவுள்ளன.


