கனடா தனது ராணுவத் தேவைகளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, ஒரு தற்சார்பு நாடாக உருவெடுக்க பிரதமர் மார்க் கார்னி ‘ராணுவத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை’ (Defence Industrial Strategy) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் கனடா தனது ராணுவத் தளவாடங்களுக்காக பெருமளவு அமெரிக்காவையே நம்பியிருந்தது.
இனி அந்த நிலை மாறி, கனடாவே ஒரு சிறந்த உற்பத்தியாளராக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இனிவரும் காலங்களில் ராணுவத் தளவாட ஒப்பந்தங்களில் 70 சதவீதமானவற்றை, உள்நாட்டு நிறுவனங்களுக்கே வழங்குவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது செயல்பாட்டில் இல்லாத பழைய வாகனங்கள் மற்றும் போர்க்கப்பல்களைச் சீரமைத்து, ராணுவத்தின் தயார் நிலையை 85 சதவீதம் வரை உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
