கியூபெக் மாகாணத்தின் அதிகாரப்பூர்வ அரசு இலச்சினையில் (Coat of Arms) நீண்டகாலமாக இடம்பெற்றிருந்த பிரிட்டிஷ் ராஜமுத்திரையான ‘கிரீடத்தை’ (Crown) நீக்குவதற்கு, மாகாண அரசு முடிவெடுத்துள்ளது.
கனடாவின் மற்ற மாகாணங்கள் இன்னும் முடியாட்சியின் அடையாளங்களைக் கொண்டுள்ள நிலையில், கியூபெக் எடுத்துள்ள இந்த முடிவு அதன் தனித்துவமான தன்னாட்சி அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கியூபெக் நீதியமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் இது குறித்துக் கூறுகையில், “பெரும்பாலான கியூபெக் மக்களுக்கு பிரிட்டிஷ் முடியாட்சியுடன் எந்த ஒட்டுதலும் இல்லை. எமது மக்கள் எதனைத் தங்கள் அடையாளமாகக் கருதுகிறார்களோ, அதையே அரசுச் சின்னங்களும் பிரதிபலிக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
1939-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்தச் சின்னம், நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
