Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியப்போவதில்லை – பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான இரண்டு நாள் அமைச்சரவைக்
கூட்டம் கியூபெக் நகரில் நிறைவடைந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான ராஜதந்திர மோதல்
உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும்
பொருளாதாரத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அமெரிக்காவின் தயவில் கனடா வாழவில்லை, நாங்கள் கனடியர்களாக இருப்பதாலேயே செழிக்கிறோம் என்ற தனது முந்தைய கருத்தை அமைச்சர்களிடையே பிரதமர் கார்னி மீண்டும் வலியுறுத்தினார்.

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பில் அமெரிக்காவை மட்டும் சார்ந்திராமல், மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்தவும், கனடாவின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் அவர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு, பொருளாதார நெருக்கடி, சர்வதேச வர்த்தகம்
முதலான மூன்று முக்கிய விஷயங்கள், அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதி நாளில் விவாதிக்கப்பட்டன.

கனடாவின் கோஹியர் (Cohere) நிறுவனத்தின் நிபுணர்களுடன்
இணைந்து, அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது மற்றும்
வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் விரிவான திட்டங்களை முன்வைத்தார்.

அமெரிக்கா புதிய வரிகளை (Tariffs) விதித்தால், அதை எதிர்கொள்ளும் வகையில் மாற்று வர்த்தக வழிகளைக் கண்டறிய நிபுணர்கள் குழுவுடன் அமைச்சரவை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர் ஜானிஸ்
ஸ்டெய்ன் மற்றும் இந்தியாவிற்கான முன்னாள் தூதர் நாதிர் படேல்
உள்ளிட்டோர் கலந்துகொண்டு, உலக நாடுகளுடனான உறவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி 2026 இல் யூடியூப்பில் அதிரடி மாற்றங்கள்
அடுத்த செய்தி மத்திய அரசின் 16 ஆயிரம் பணிநீக்கத் திட்டத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி வேலையைத் தக்கவைக்க வேலை பரிமாற்ற 39 முறையில் ஆர்வம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மத்தியகிழக்கு போர்க்களத்தில் சிக்கிய கனடியர்கள்

மார்ச் 10, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஒண்டாரியோவில் 21 மோசடிக் குற்றங்களுக்காக தேடப்படும் தமிழர்..!!

பிப்ரவரி 26, 2025
கனடா

தாலிஸ்மான் மலை ரிசார்ட் தற்போது புரூஸ் டிரெயில் பாதுகாப்பு நிறுவனம் வசம்!

டிசம்பர் 3, 2025
இலங்கைமுதன்மை செய்தி

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?