Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

இனப் பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் வாகன சோதனைகள்!

ஜனவரி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எந்தவொரு காரணமும் இன்றி போலீஸார் வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்யும் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மிக முக்கியமான வழக்கை கனடா உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கத் தொடங்கியது.

இந்தச் சோதனைகள் இனப் பாகுபாட்டிற்கு (Racial Profiling) வழிவகுப்பதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மொண்ட்ரியலைச் சேர்ந்த ஜோசப்-கிறிஸ்டோபர் லுவாம்பா என்ற கறுப்பின இளைஞர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

எந்தக் குற்றமும் செய்யாத நிலையிலும், 18 மாதங்களில் சுமார் 10 முறை போலீஸார் தன்னை வழிமறித்துச் சோதனை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் பிடிக்கவும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தத் தன்னிச்சையான சோதனைகள் ஒரு அத்தியாவசியக் கருவி" என்று கியூபெக் மாகாண அரசு வாதிடுகிறது.

எந்தக் காரணமும் இன்றி ஒருவரை நிறுத்துவது என்பது போலீஸாரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு வழிவகுக்கிறது எனவும் இது குறிப்பாக கறுப்பின மற்றும் பழங்குடியின மக்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படுவதால், இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனவும் ஜோசப்-கிறிஸ்டோபர் லுவாம்பா தெரிவித்துள்ளார்.

கடந்த 1990-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், சாலைப் பாதுகாப்பிற்காக இத்தகைய சோதனைகள் அவசியமானவை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல புள்ளிவிவரங்கள், இத்தகைய சோதனைகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை மட்டுமே அதிகம் பாதிப்பதாக நிரூபித்துள்ளன.

மேலும், கியூபெக் மாகாண நீதிமன்றங்கள் ஏற்கனவே இந்தச் சோதனைகள் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ளன.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கியூபெக்கில் தன்னிச்சையான வாகனச் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய ராசிபலன் – 20.01.2026
அடுத்த செய்தி பதவி விலகுகின்றார் கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

பதவி விலகுகின்றார் கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல்

ஜனவரி 20, 2026
கனடாமுதன்மை செய்தி

ஜஸ்டின் ட்ரூடோவின் ஒன்பது வருட பிரதமர் பதவி முடிவிற்கு வருகின்றது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் லவால் பகுதிக்கு சென்றவர்கள் தடுப்பு ஊசி போடவேண்டும் -சுகாதாரத்துறை

பிப்ரவரி 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பாடசாலை அதிபருக்கு சிறை தண்டனை.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?