உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான ‘பாம்பார்டியர்’ (Bombardier), மொண்ட்ரியலில் உள்ள தனது உற்பத்தி மையத்தின் திறனை இருமடங்காக அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் மொண்ட்ரியலில் சுமார் 1,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.
சர்வதேச அளவில் ‘பிசினஸ் ஜெட்’ (Business Jets) ரக விமானங்களுக்கு ஏற்பட்டுள்ள அதீத தேவையைக் கருத்தில் கொண்டு இந்த விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொண்ட்ரியல் – ட்ரூடோ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாம்பார்டியர் உற்பத்தி மையத்தில் இதற்கான பணிகள் 2026-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
தற்போது ஆண்டுக்கு 120 முதல் 150 விமானங்களை உற்பத்தி செய்யும் பாம்பார்டியர், இனி ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்ட விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
