கியூபெக் மாகாணத்தின் Montérégie பகுதியூடாக, கனடா எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 19 ஹைட்டி (Haiti) நாட்டு அகதிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த இந்த அகதிகளைக் கனடிய காவல்துறை கிறிஸ்துமஸ் தினம் இரவு வேளையில் கைது செய்துள்ளது. பூச்சியத்துக்கும் குறைவான செல்சியல் வெப்பநிலை அளவான கடும் குளிரில், காடுகளுக்குள் பதுங்கியிருந்த இவர்களைப் கனடிய காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் ஒரு வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு சிறு குழந்தைகளும் அடங்குவர். கடும் குளிரால் பாதிக்கப்பட்ட இவர்களில் பலர் தற்போது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கைதுசெய்யப்பட்ட 19 பேரும் அகதி அந்தஸ்து கோரியுள்ள நிலையில், அவர்களின் விபரங்களை, கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) ஆய்வு செய்து வருகிறது.
இதேவேளை, சட்டவிரோதமாக உள்நுழைந்த அகதிகளை ஏற்றிச் செல்ல வாகனத்துடன் காத்திருந்த ஒரு நபரும் கனடிய காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளார். அவர் மீது &சுங்கச் சட்டத்தின் (Customs Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
