கனடாவின் தென் அல்பெர்டாவிலுள்ள க்ளென்வுட் பகுதியில் பதினாறு வயதுள்ள சிறுமியின் உடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் க்ளென்வுட் நகரின் மேற்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்டடிருந்த நிலையில் ஒரு வாகனம் இருப்பதாக மவுண்டீஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குறித்த வாகனத்துக்குள் சிறுமியின் உடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டதுடன் சிறுமியின் உடலை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தகவல்கள் உள்ளவர்கள், கார்ட்ஸ்டன் RCMP காவல் நிலையத்தை 403-653-4931 என்ற எண்ணிலும், அல்லது இரகசியமாக தகவல் வழங்க விரும்புவோர் 1-800-222-8477 என்ற Crime Stoppers எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.