Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த கியூபெக் மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஜூலை 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மறுசுழற்சி நிறுவனமான ரைகோவாவுக்கு (Ricova) $1 மில்லியனை மொன்றியால் நகரசபை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை, கியூபெக்கின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் Côte-des-Neiges—Notre-Dame-de-Grâce (CDN-NDG) நகராட்சிப் பகுதியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரைகோவா நிறுவனம் நிறைவேற்றத் தவறியதே இந்த வழக்கின் பின்னணி ஆகும்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கழிவுகளைச் சேகரிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்காக நகரசபை மறுசுழற்சி நிறுவனமான ரைகோவா மீது விதித்த அபராதங்களை மையமாகக் கொண்டுள்ளது.

மொன்றியால் நகரசபை டெண்டர் கோரியபோது, செய்ய வேண்டிய வேலைகள் குறித்த தவறான தகவல்களை வெளியிட்ட பிறகு ரைகோவா ஒப்பந்தத்தைப் பெற்றது.

இந்தத் தகவல் விரைவிலேயே சரிசெய்யப்பட்டாலும், ஒப்பந்தத்தை ரைகோவா நிறைவேற்ற முடியாமைக்கு, ஆரம்ப கட்டத்தில் அளிக்கப்பட்ட தவறான தகவல்களும் பங்களித்தன.

2019 ஆம் ஆண்டில், ரைகோவா தனது கடமைகளை நிறைவேற்ற முடியாததால் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பிறகு, நகரசபையால் “சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட” அபராதத் தொகை $1,014,903 ஐத் திரும்பப் பெறக்கோரி வழக்குத் தொடர்ந்தது.

கியூபெக் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் 2024 ஆம் ஆண்டில், மொன்றியல் நகரசபையானது, ரைகோவா நிறுவனத்துக்குப் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்.

ஏனெனில், ஒரு புதிய ஒப்பந்தம் மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டவுடன் ரைகோவா நிறுவனம், தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்படும் என்று மொன்றியல் நகரசபை, அந்த நிறுவனத்தை நம்ப வைத்தது என்பதே, அந்தக் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காரணமாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியான கியூபெக்கின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, மொன்றியல் நகரசபை ரைகோவாவுக்கு 1 மில்லியன் டொலர் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மூடப்படவுள்ள ஃப்ளோரன்ஸ்வில் பாலம்
அடுத்த செய்தி இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தபால் திணைக்கள ஊழியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

ஜூன் 1, 2025
கனடாமுதன்மை செய்தி

சிறிய விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கெவின் மிர்ஷாஹி கொலை வழக்கில் தொடர்புடையவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 31, 2026
கனடாமுதன்மை செய்தி

தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த நபருக்கு 28,000 டொலருர் அபராதம்

ஆகஸ்ட் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?