நாட்டின் வாகன உற்பத்தித் துறையைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் மத்திய அரசும் ஒன்டாரியோ மாகாண அரசும் இணைந்து புதிய “ஆட்டோ டாஸ்க் போர்ஸ்” (Auto Task Force) என்ற உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளன.
சமீபத்தில் சீனாவுடன் மத்திய அரசு மேற்கொண்ட மின்சார வாகன (EV) வர்த்தக ஒப்பந்தம் ஒன்டாரியோ மாகாண மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
எதிர் வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் சுமார் 49,000 சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்கள் நாட்டிற்குள் வரவுள்ளன.
இதனால் உள்நாட்டு வாகன உற்பத்தி மற்றும் கனடியத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படலாம் என ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்டு அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இந்த விரிசலைச் சரிசெய்து, ஒற்றுமையை நிலைநாட்டவே இந்தப் புதிய கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
