Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டம் – ஜெர்மனி நிறுவனத்தை முதன்மைத் தேர்வாக முடிவு செய்தது கனேடிய மத்திய அரசு!

ஜூலை 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

நாட்டின் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ராணுவக் கொள்முதல் திட்டமாகப் பார்க்கப்படும் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்புச்சேவைக்கான கொள்முதல் தெரிவின் போது, மத்திய அரசு, ஜேர்மனி நாட்டின் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

கனடா தன்னிடம் உள்ள 4 பழைய விக்டோரியா-கிளாஸ் கப்பல்களை 2035-க்குள் முழுமையாக ஓய்வுபெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், தென்கொரியா தங்களால் அதிவேகமாக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து விநியோகிக்க முடியும் என்ற வாக்குறுதியை முன்வைத்திருந்தது.

இதனையடுத்து நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் பெறும் போட்டியில், தென்கொரியாவே இதுவரை முன்னணியில் இருந்து வந்தது. தென்கொரியாவின் உற்பத்தி வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஜெர்மனி மற்றும் நோர்வே நாடுகள் தங்களது சொந்த கடற்படைக்கான தயாரிப்பு வரிசையில், உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருந்த இடங்களை, கனடாவிற்காக மாற்றியமைத்து, கனடாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளன.

இதன்படி, 2036-ஆம் ஆண்டிற்குள் முதலாவது நவீன நீர்மூழ்கிக் கப்பலையும், 2040-க்குள் அடுத்த 4 கப்பல்களையும் தயாரித்து கனடாவிடம் ஒப்படைப்பதாக ஜெர்மனி வாக்குறுதி அளித்துள்ளது. அத்துடன், இந்த தயாரிப்பு ஒப்பந்தம் தங்களுக்குக் கிடைத்தால், கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 86 பில்லியன் டொலர் அளவுக்குப் பொருளாதார ஊக்கத்தையும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது.

மேலும், மானிட்டோபாவில் உள்ள ‘சர்ச்சில் துறைமுகத்தை’ (Port of Churchill) திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி மையமாக மாற்றவும், கனடாவில் விண்வெளி ஏவுதள வளாகம் (Space launch complex) மற்றும் அதிநவீன ஏவுகணை சோதனைத் தளங்களை அமைக்கவும் ஜெர்மனி முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், தமக்கான நீர்மூழ்கிகளைத் தயாரித்து அளிப்பதற்கான கொள்முதல் ஒப்பந்தத் தேர்வில், தென்கொரியாவின் ‘ஹன்வா ஓஷன்’ நிறுவனத்தை நிராகரித்துவிட்டு, ஜெர்மனியின் ‘திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ்’ (TKMS) நிறுவனத்தை மத்திய அரசு தனது முதன்மைத் தேர்வாக (Preferred bidder) முடிவு செய்துள்ளதாக நம்பகமான உத்தியோகபூர்வ ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ரோயல் கனேடிய கடற்படைக்காக (Royal Canadian Navy) 12 புதிய நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கும், அடுத்த முப்பது ஆண்டுகளுக்கான அதன் வாழ்நாள் பராமரிப்புச் செலவினங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நவீன நீர்மூழ்கிக்கப்பல்களைத் தயாரிக்கும் பாதுகாப்புத் திட்டத்தில் ஜெர்மனி மற்றும் நோர்வே நாட்டின் கூட்டுப் பங்களிப்புடன் வடிவமைக்கப்பட்ட ‘டைப் 212சிடி’ (Type 212CD) ரக நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது என, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இறுதி முடிவெடுத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) தலைவர்கள் உச்சிமாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன்னதாக, இம்மாபெரும் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்முதல் தீர்மானத்தை, அவர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரியவருகின்றது.

முந்தைய செய்தி மொன்றியல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவ விவகாரம்! – விசாரணையைத் தீவிரப்படுத்தியது BEI புலனாய்வு அமைப்பு!
அடுத்த செய்தி கியூபெக்கின் ரெபென்டிக்னி நகர் சரக்கு ரயில் விபத்து! – காரணத்தைக் கண்டறிய உயர்மட்டப் புலனாய்வுக் குழு பணிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு ஏன்? – அண்ணாமலை விளக்கம்..!!

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

களுத்துறை பகுதியில் பணத்தை திருடும் காகம்!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு

மார்ச் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்க்கொண்ட அமைச்சர்

ஜூலை 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?