சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) கியூபெக் மாகாணத்தின் புதிய சுகாதார அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை முன்னர் வகித்துவந்த கிறிஸ்டியன் துபே (Christian Dubé) தனது பதவியை இராஜினாமா செய்தமையை அடுத்தே, அந்த பதவிக்கு சோனியா பெலாஞ்சரின் பெயர் (Sonia Bélanger) முன்மொழியப்பட்டது.
புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சோனியா பெலாஞ்சர், தொழில்ரீதியாக ஒரு பதிவுபெற்ற மருத்துவத்தாதி ஆவார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, மொன்றியலின் ஒரு பெரிய சுகாதாரக் கட்டமைப்பின் (CIUSSS) தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது.
கியூபெக் மருத்துவர்களுடன் மாகாண அரசுக்கு நிலவும் கசப்பான உறவைச் சீர்செய்து, முடங்கிக் கிடக்கும் சுகாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே இவரது முதல் பணியாக உள்ளது.
