Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவில் வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்

டிசம்பர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) காய்ச்சல் வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாகப் பரவி வருவதாக கனேடிய சுகாதாரத் திணைக்களம் (Health Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, புதிய வகை H3N2 வைரஸ் சிறுவர்களைக் கடுமையாகப் பாதித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 6,799 பேருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய வாரத்தை விட 20.2 சதவீதம் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காய்ச்சலின் தீவிரம் காரணமாக, ஒட்டாவா பகுதியில் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் இந்த வாரம் உயிரிழந்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில், இவ்வளவு குறுகிய காலத்தில் ஒட்டாவாவில் இத்தனை சிறுவர்கள் உயிரிழந்திருக்கின்றமை குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியல் நகரப்பகுதிகளில் உள்ள சிறுவர் மருத்துவமனைகள் நோயாளிகளின் வருகையால் திணறி வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு 8 மடங்கு அதிகரித்துள்ளது.

5 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய வகை வைரஸுக்கு எதிராக முழுமையாகச் செயல்படாவிட்டாலும், அது உயிருக்கு ஆபத்தான நிலையைத் (Severe Illness) தடுக்கும் என மருத்துவர்கள்
உறுதியளிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலங்கள் நெருங்குவதால், மக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனேடிய சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி துணை அமைச்சர்கள் மட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி.
அடுத்த செய்தி கியூபெக்கின் புதிய சுகாதார அமைச்சராக சோனியா பெலாஞ்சர் நியமனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ரென்ஃப்ரூவில் நடந்த விபத்து தொடர்பாக விசாரணை ஆரம்பம்

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்கனடா

தமிழ் பெண்கள் சமூகம் – கியூபெக் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கினி பெண்ணே நிகழ்வு இன்று….

மார்ச் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதி

ஆகஸ்ட் 7, 2025
கனடா

தேசிய தலைநகர் ஆணையகத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம்

பிப்ரவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?