ஆளும் கியூபெக் கட்சியின் (CAQ) செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ள நிலையில், அதன் தலைவர் மற்றும் கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகால்ட் (François Legault) “எதிர்வரும் 2026 தேர்தலில் தமது கட்சியே மீண்டும் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பார்த்தி கியூபெக்வா கட்சி வெற்றி பெற்றால், அவர்கள் மீண்டும் கியூபெக்கை கனடாவிலிருந்து பிரிக்க வாக்கெடுப்பு (Referendum) நடத்துவார்கள் எனவும் இது கியூபெக்கின் பொருளாதாரத்தை அடியோடு பாதிக்கும் எனவும் கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகால்ட் எச்சரித்துள்ளார்.
வாக்கெடுப்பு குறித்த பயம் முதலீட்டாளர்களை வெளியேற்றும் என்றும், இது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, எதிர்க்கட்சியான பார்த்தி கியூபெக்வா (PQ) 39% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆனால் ஆளும் கட்சி, வெறும் 18% ஆதரவுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
