எம்.எல்.எஸ். கிண்ண கால்பந்து இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் ஈஸ்டர்ன் மற்றும் வெஸ்டர்ன் கான்பரன்ஸ் கால்பந்தாட்ட அணிகள் இடையே இடம்பெற்றன.
இதன் இறுதிப் போட்டி ஒன்றில், ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணியும், நியூயோர்க் சிட்டி எப்.சி அணியும் மோதிக்கொண்டன.
இப்போட்டியில் இன்டர்மியாமி அணி, 5-1 என்ற கோல் கணக்கில் வென்று, எம்.எல்.எஸ். இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 7ம் திகதி மியாமி நகரில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி மற்றும் வான்கூவர் அணிகள் மோதவுள்ளன.
