டி 20 சர்வதேச உலக கிண்ண போட்டியானது ஜூன் மாதம் ஆரம்பமானது. இந்நிலையில் இந்திய அணியானது ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணியானது அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளோடு போட்டியிட்டு சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
நான்காவது போட்டியான இறுதி லீக் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் இந்திய அணி கனடாவோடு மோத இருந்த நிலையில் மலை காரணமாக போட்டியானது இடை நிறுத்தப்பட்டது.
இதன்படி இந்திய அணியானது நான்கு போட்டிகளில் போட்டியிட்டு ஏழு புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளதுடன் கனடாவானது மூன்று புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.