நாட்டில் புகையிலை பழக்கத்தை தடை செய்வதற்கு ஒரு முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2010 ஆம் ஆண்டிற்கு பின் பிறந்த எவரும் புகையிலை பயன்படுத்துவதை குறைப்பதற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் நேற்று (29) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையானது தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த ரத்நாயக்க மற்றும் ராஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த எல்.எல்.அமில இசுரு ஆகியோரால் அமைச்சகத்தில் வழங்கப்பட்டது.
