நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக பதுளை செங்கலடி பிரதான வீதியில் லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19ஆம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பயணிக்கும் பயணிகள் அவ்விடத்தில் இறக்கப்பட்டு நடைபயணமாக அவ்விடத்தை கடந்து முச்சக்கரவண்டி மற்றும் வேறு வாகனங்களில் பயணிக்கின்றனர்.என்பது குறிப்பிட தக்கது.
