ஆணைமடுவில் 04 வயது சிறுவனொருவன் வெட்டப்பட்டிருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சிறுவன் நேற்றைய தினம் பாட்டியின் வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு செல்லும் வழியில், தண்ணீர் நிரம்பிய கழிப்பறைக் குழிக்குள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்
எனினும் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்க் கொண்டு வந்த நிலையில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

