ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகள் மற்றும் சேவைகளை இணையவழி டிஜிட்டல் மயமாக்கும் திட்டமானது தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தலைமையின் கீழ் நேற்று(30) கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் அமைச்சு வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் பதிவு செய்யும் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


