Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடமராட்சியில் மாமியாரை கொலை செய்த மருமகன்

மார்ச் 12, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார்.

அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார். அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான படுகொலையானவரின் மருமகனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவரான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முந்தைய செய்தி விவசாய நீரியல் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் விடயதானங்கள் ஆராய்வு
அடுத்த செய்தி புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் 2026

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை

ஏப்ரல் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கோண்டாவிலும் வீடு கையளிப்பு

அக்டோபர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திடீர் சுகவீனம் காரணமாக பாலகனொருவர் உயிரிழப்பு…

மே 9, 2025
இலங்கை

வவுனியா கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க இராணுவம் இணக்கம்: திலகநாதன் எம்.பி

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?