நாட்டில் புதிய ஆட்சிக்கு எதிராக பல காட்சிகள் ஒன்று கூடி தங்களுடைய கலந்த்துரையாடல்களை மேட்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்க் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து பேசியுள்ளனர்.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகளின் திருமண வைபவத்தில் வைத்தே அவர்கள் இருவரும் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திருமண நிகழ்ச்சியின் போது, மணமகள் சார்பில் சஜித் பிரேமதாசவும், மணமகன் சார்பில் ரணில் விக்ரமசிங்கவும் சாட்சிக் கையொப்பமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்தை முன்னிட்டு இருவரும் மிகச் சுருக்கமான கருத்துப் பரிமாற்றமொன்றை நடத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
