கியூபெக் நகரத்தின் நகர சபை அறையில் தொங்கவிடப்பட்டிருந்த சிலுவை எனும் மத அடையாளத்தை அகற்றுவது தொடர்பான தீர்மானம் மீது இன்று செவ்வாய்க்கிழமை அன்று நகர சபை அதிகாரிகள் வாக்களிக்க உள்ளனர்.
அரசு மதச்சார்பின்மைக் கொள்கையை (Separation of Church and State) உறுதிப்படுத்தவும், சபை அறையை ஒரு மத நடுநிலையான இடமாக மாற்றவும் இந்த நடவடிக்கை, முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலுவையை அகற்ற வேண்டும் என்ற பரிந்துரையை, கியூபெக் நகரத்தின் ”உள்ளடக்கிய நகரத்திற்கான ஆலோசனைக் குழு” (Advisory Commission for an Inclusive City) கடந்த ஜூன் மாதம் வழங்கியது.
கியூபெக் நகர மேயர் புருனோ மார்ச்சந்த் (Bruno Marchand), கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தக் குழுவின் நிலைப்பாட்டை ஏற்று, சிலுவையை அகற்றுவதற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.
