Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அறிமுகமாகின்றது கடுமையான பிணை மற்றும் தண்டனைச் சட்டங்களை உள்ளடக்கிய, புதிய குற்றவியல் மசோதா!

அக்டோபர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் வன்முறை மற்றும் தொடர் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கடுமையான பிணை (Bail) மற்றும் தண்டனைச் சட்டங்களை
உள்ளடக்கிய புதிய குற்றவியல் மசோதாவை (Crime Bill) அடுத்த வாரம்  நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நேற்று அறிவித்தார்.
பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூகத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குற்றவாளிகளைத் தெருக்களில் இருந்து விலக்கி வைக்கவும்
இந்தச் சட்டத் திருத்தங்கள் உதவும் என அவர் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்தின் முக்கிய அம்சமாக பிணை விதிமுறைகளில் செய்யப்படவுள்ள மிகப்பெரிய மாற்றம் காணப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவரை ஏன் காவலில் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசுத் தரப்பே நிரூபிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. உருவாகவுள்ள புதிய சட்டமானது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணை முடியும் வரை தாங்கள் ஏன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

முன்னெடுக்கப்படவுள்ள சட்ட ரீதியான மாற்றங்களைத் தவிர, நாடு முழுவதும் காவல்துறையினரின் திறனை அதிகரிப்பதற்காக குறிப்பிடத்தக்க நிதியுதவியையும் பிரதமர் அறிவித்தார். சிறையிலிருந்து பிணையில் வெளிவந்து வன்முறைச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கையாளுவதற்கு, வலுவான சட்டங்கள் தேவை என்ற எதிர்க்கட்சிகள், மாகாண முதல்வர்கள் மற்றும் காவல்துறைத் தரப்பினரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு, இந்தக் கடுமையான நடவடிக்கைகள் பதிலளிப்பதாகப் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி இஷாரா செவ்வந்தி உட்பட 04 சந்தேகநபர்களுக்கு 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவல்!
அடுத்த செய்தி களுத்துறை பகுதியில் பணத்தை திருடும் காகம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

விக்டோரியாவில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் – விமானி உயிரிழப்பு

ஜூலை 22, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Jacques-Cartier மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு

ஜூன் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

அல்பெர்டாவின் புதிய எண்ணெய் குழாய் திட்டம்: ஜூலை 1 காலக்கெடுவை நோக்கி நகரும் அரசு

ஜூன் 27, 2026
கனடாமுதன்மை செய்தி

தமது அமைச்சரவையை பிரதமர் மார்க் கார்னி வர்ணித்தார்

மே 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?