சர்வதேச அளவில் இயங்கும் கோப்பி பான நிறுவனமான ஸ்டார்பக்ஸ் (Starbucks), ஒட்டாவா நகரத்தில் உள்ள 9 கிளைகளை திடீரென மூடியுள்ளது.
வட அமெரிக்கா முழுவதுமான மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விற்பனை குறைந்துள்ளதாலும், சில கிளைகளால் இலாபகரமாகச் செயல்பட முடியவில்லை என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் எதிர்பார்க்கும் தரமான சூழலை உருவாக்க முடியாத அல்லது நிதி ரீதியாக இலாபகரமான பாதையில் செல்லாத கிளைகளை அடையாளம் கண்டு, அவற்றை மூடுவதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரையன் நிக்கோல் (Brian Niccol) கூறியுள்ளார்.
