ஒன்பது வயதுடைய சார்லிக் பொல்லாக் (Charleigh Pollock) என்ற சிறுமியின் வாழ்வுக்கு அத்தியாவசியமான, ஆண்டுக்கு 1 மில்லியன் டொலர் செலவாகும் மருந்துக்கான நிதியுதவியை, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளதால், வான்கூவர் தீவைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சார்லிக், CLN2 பேட்டன் நோய் (Batten disease) எனப்படும் ஒரு அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தினமும் பல வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்தி, இறுதியில் மூளை பாதிப்பை உண்டாக்கும்.
CLN2 எனும் அந்த நோயின் முன்னேற்றத்தை குறைப்பதற்காக, மூளையில் நேரடியாகச் செலுத்தப்படும் ‘Brineura’ என்ற மருந்துக்கான நிதியையே, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு நிறுத்தியுள்ளது.
சிறுமி சார்லிக் மட்டுமே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரே நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
