ரோஸ்லாந்து கோல்ஃப் மைதானத்தின் (Roseland Golf Course) பழமையான கிளப்ஹவுஸை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய கிளப்ஹவுஸையும், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தையும் (Condominiums) கட்டுவதற்கு ஆர்வமுள்ள கட்டுமான நிறுவனங்களைத் தேடுவதற்கு, வின்ட்சர் நகர சபை (Windsor City Council) ஒப்புதல் அளித்துள்ளது.
வின்ட்சர் நகர சபை உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தற்போது மூடப்பட்டுள்ள கிளப்ஹவுஸை இடிப்பதற்காக 2.5 மில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
அத்துடன், வின்ட்சர் நகர சபையானது இந்த புதிய கிளப்ஹவுஸ் மற்றும் வாகன நிறுத்துமிடத்தின் ஒரு பகுதியில் குடியிருப்புகள் முதலானவற்றை கட்டும் திட்டங்களைச் சமர்ப்பிப்பதற்கு கட்டுமான நிறுவனங்களைத் விரைவில் அழைக்கவுள்ளது.
1926-ல் புகழ்பெற்ற கோல்ஃப் மைதான வடிவமைப்பாளர் டொனால்ட் ஜே. ரோஸ் (Donald J. Ross) என்பவரால் வடிவமைக்கப்பட்ட 18-ஹோல் கோல்ஃப் மைதானம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் வின்ட்சர் நகர சபை உறுதி செய்துள்ளது.
