மத்திய லிபரல் அரசாங்கத்தின் பொருளாதாரத் தலையீடுகளாகக் கருதப்படுபவற்றிற்கு எதிராக, 2026ஆம் ஆண்டில் பொது வாக்கெடுப்பு நடத்த அல்பேட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் திட்டமிட்டுள்ளார்.
அதே வேளை, கனடாவிலிருந்து பிரிந்து செல்லும் எந்த நோக்கத்தையும் அவர் மறுத்துள்ளார்.
இந்த பொது வாக்கெடுப்புக்கான முன்மொழிவுகளை உருவாக்கும் “அல்பேட்டா நெக்ஸ்ட்” குழுவுக்கு ஸ்மித் தலைமை தாங்கவுள்ளார்.
மத்திய அரசின் கொள்கைகள் அல்பேட்டாவின் பொருளாதாரத்தின் மீதான “தாக்குதல்கள்” என்று அவர் விமர்சித்துள்ளார்.
எரிசக்தி கொள்கை மற்றும் சமத்துவ கொடுப்பனவுகளில் மாற்றங்கள் உட்பட மத்திய அரசுக்கான கோரிக்கைகளையும் டேனியல் ஸ்மித் முன்னிறுத்தியுள்ளார்.
கனடாவிலிருந்து ஆல்பர்டா பிரிந்து செல்வதை தாம் ஆதரிக்கவில்லை என்று கூரியுள்ள அவர், போதுமான கையெழுத்துக்கள் பெறப்பட்டால் குடிமக்களால் முன்மொழியப்படும் பிரிவினை தொடர்பான பொது வாக்கெடுப்புக் கேள்வியும் 2026 வாக்கெடுப்பில் இடம்பெறும் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
கனடாவின் பூர்வீக மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் ஒப்பந்தங்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது, அல்பேட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் சுட்டிக்காட்டியுள்ளார்.