ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ளூர் நகராட்சிகள் பயன்படுத்தும் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை (Speed Cameras) முற்றிலுமாகத் தடை செய்யப் போவதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) அறிவித்துள்ளார்.
இதனால், ஒட்டாவா நகரின் சாலைப் பாதுகாப்பு மற்றும் வருவாய் ஈட்டும் திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.
இந்தக் கேமராக்களை பண வேட்டை என்று விமர்சித்த முதல்வர் டக்ஃபோர்ட், இதற்குப் பதிலாக மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளார்.
அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, ஓட்டுநர்களை ஆரம்பத்திலேயே வேகத்தைக் குறைக்கத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு தனது அரசு ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.
ஒட்டாவா நகரில் தற்போது சுமார் 60 வேகக் கேமராக்கள் இயங்கி வருகின்றன. மேலும், இந்த ஆண்டு மேலும் 24 இடங்களில் புதிய கேமராக்களை நிறுவத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பால் அந்தத் திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
