கியூபெக் மாகாணப் பொலிஸார் (Sûreté du Québec), 13 வயது சிறுமி அமீலியா லபா (Amélia Lapa)-வைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் அவசர உதவியை நாடியுள்ளனர்.
இந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக இந்த சிறுமி, மொன்ட்ரியலுக்கு வடகிழக்கே சுமார் 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெர்தியர்வால் (Berthierville) நகரின் Frontenac வீதிப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில், காணப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் அந்த சிறுமி நடந்து சென்றதாகவும், வேறு வாகன உதவியை நாடியிருக்கலாம் என்றும் பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
