ஹேஸ்டிங்ஸ் கவுண்டியில் ஒன்பது பேருக்கு தட்டம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் உள்ளூர் சுகாதார பிரிவு சமூக பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது
கடந்த வியாழக்கிழமை காலை 11:11 மணி முதல் பிற்பகல் 1:11 மணி வரை, ஒன்ராறியோவின் மடோக்கில் உள்ள மத்திய ஹேஸ்டிங்ஸ் குடும்ப சுகாதார குழுவில் ஏற்பட்ட தட்டம்மை பாதிப்பு குறித்து தென்கிழக்கு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. சாத்தியமான தொடர்புகளை அடையாளம் காண சுகாதார பிரிவு மருத்துவ மையத்துடன் இணைந்து செயல்படுகிறது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்டம்மை என்பது மிகவும் தொற்றக்கூடிய வைரஸ் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்கும்போதும் , இருமும்போதும் , தும்மும்போது அல்லது பேசும்போது காற்றின் மூலம் எளிதில் பரவுகிறது என சுகாதார பிரிவு இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தட்டம்மை அறிகுறிகள் வெளிப்பட்ட ஒரு வாரத்திலிருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு பரவ தொடங்கும் , மேலும் காய்ச்சல், , இருமல், மயக்கம் மற்றும் கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல் தட்டம்மை நோயின் அறிகுறிகளாகும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று வரை, சுகாதாரப் பிரிவு ஒரு நோய்த்தொற்றை மட்டுமே உறுதி செய்துள்ளது, மேலும் பிற சாத்தியமான அறிகுறிகளுடன் தொடர்புடையவர்களை கவனித்து வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மாகாணத்திற்குள் பயணம் செய்த தடுப்பூசி செலுத்தாத ஒரு வயது வந்தவர் முதல் தொற்று நோயாளி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தென்கிழக்கு சுகாதாரப் பிரிவு, தட்டம்மை அறிகுறிகள் தோன்றினால், வீட்டிலேயே இருந்து சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும் என கேட்டுக்கொண்டுள்ளது
1970 க்கு முன்பு பிறந்தவர்கள் குழந்தையாக இருந்தபோது தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், மேலும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.