Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் சிறுமி சுட்டுக்கொலை வழக்கில் குற்றச்சாட்டுக்குட்பட்டவரை விடுவிக்க கோரிக்கை

மார்ச் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2021-ஆம் ஆண்டு மொன்றியலின் செயிண்ட்-லியோனார்ட் (St-Léonard) பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

15 வயது சிறுமியான மெரியம் பௌண்டாவி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அய்மானே புவாடி (Aymane Bouadi) என்பவரை விடுவிக்குமாறு, அவரது வழக்கறிஞர் கோரியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் திகதி, வாகன நிறுத்துமிடம் தொடர்பான இரு தொழிலதிபர்களுக்கு இடையிலான மோதலில், நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் எவ்வித தொடர்புமற்ற மெரியம் பௌண்டாவி என்ற சிறுமி தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

இந்த வழக்கில் சலீம் துவைபி (Salim Touaibi) மற்றும் அய்மானே புவாடி ஆகிய இருவர் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நடந்த இறுதி வாதங்களின் போது, வழக்கறிஞர் மார்ட்டின் லத்தூர் (Martin Latour), அய்மானே புவாடி அக்கொலையில் சம்பந்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மொன்றியல் லோரியர் மெட்ரோ அருகே கத்திக்குத்து தாக்குதல் – சந்தேக நபர் கைது
அடுத்த செய்தி ஆர்க்டிக் பாதுகாப்புக்கு 3,500 கோடி டொலர் திட்டம் – மார்க் கார்னி அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

வீதியிலுள்ளோருக்கு 120 மில்லியன் உதவி – மனிதநேய நோக்கில் கியூபெக் அரசு”

மார்ச் 19, 2026
கனடாமுதன்மை செய்தி

ஓட்டுனர் உரிமங்களில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ள அல்பர்ட்டா மாகாண அரசு

செப்டம்பர் 16, 2025
கியூபெக்

கியூபெக்கில் குடும்ப மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்புவதில் பாரிய பின்னடைவு

மே 1, 2026
கியூபெக்

மொன்றியல் துறைமுக திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய சுற்றுச்சூழல்

ஜனவரி 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?