உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விரும்பவில்லை என இங்கிலாந்து உளவுத்துறை அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இன்று ,இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரிச்சர்ட் மோரி கூறியதாவது,
அமைதி பேச்சுவார்த்தைக்கு புட்டின் முன்வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. புட்டின் நம்மை அவருடன் இணைத்துக்கொண்டிருக்கிறார்.
புட்டின் தனது ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியாது.
உக்ரைனை சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்று புட்டின் நினைத்தார். ஆனால், அவரும் மற்றவர்களும் உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
