Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் அதிகரித்து வரும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு, குறிப்பாக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள், தன்னை விசனத்துக்கு உள்ளாக்குவதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வர்த்தகக் கொள்கைகளால் உலக நாடுகள் பல பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கான அமெரிக்கத் தூதரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஹாலிஃபாக்ஸ் வர்த்தக சபையின் நிகழ்வொன்றில் பேசிய ஹோக்ஸ்ட்ரா, “அமெரிக்கா-கனடா உறவில் ஆர்வமுள்ள கனடியர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது” என்று கூறினார்.

கனடாவின் நிதி அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-ஃபிலிப் ஷாம்பெயின், இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகப் பிரச்சினையை “போர்” என்று பலமுறை குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய மொழிப்பிரயோகம் “ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்” என்றார்.

“உண்மையாகவே கனடா அமெரிக்காவுடன் போரில் இருந்தால், அது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்” என்றும் ஹோக்ஸ்ட்ரா கூறியுள்ளார்.

கனடா புள்ளிவிவரங்களின்படி, டிரம்ப்பின் வரி அறிவிப்புகளுக்குப் பிறகு, கனடாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி கிட்டத்தட்ட 16% குறைந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு வரும் பொருட்களின் இறக்குமதியும் கிட்டத்தட்ட 11% வீழ்ச்சியடைந்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையேயான பயணங்களும் குறைந்துள்ளன.

இருப்பினும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா இருதரப்பு உறவுகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி பில் 21 வழக்கில் நேரடியாக தலையிடும் கனேடிய மத்திய அரசு
அடுத்த செய்தி போக்குவரத்து வேகக் கேமராக்கள் தொடர்பில் குரலெழுப்பிய காவல்துறைத் தலைவர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் லிபரல் கட்சிக்கு முக்கிய வெற்றி

செப்டம்பர் 6, 2026
கனடா

ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்!

மார்ச் 20, 2026
அண்மைய செய்திகள்கனடா

பிராம்ப்டனில் மீண்டும் தாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்து!

மார்ச் 22, 2026
கனடா

சர்வதேச மனிதக் கடத்தலோடு தொடர்புடைய 31 வயது இளைஞர்

ஜூன் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?