இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இந்தியாவில் இடம்பெற்ற பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் போட்டி இதுவாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்திய அணி தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் பல முன்னணி வீரர்கள் வலியுறுத்தியிருந்த நிலையிலும் குறித்த போட்டி தற்போது நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
